அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 April 2023 12:30 AM IST (Updated: 16 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்செந்தூர்

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணம் பிரசாத்நகரில் உள்ள அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட பிரதிநிதி ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம், காயல்பட்டினம் பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன், நகர செயலாளர் காயல் மவுலானா, செந்தமிழ் சேகர், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, அனுமன் சேனா தலைவர் தங்கராஜா, ஆன்மிக அணி மாநில செயலாளர் பாலன், ஒன்றிய தலைவர் பேச்சிமுத்து, ஒன்றிய துணை தலைவர் சத்திகுமார் உள்ளிட்டவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் ராஸிக் முஸம்மில் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் தயாநிதி முன்னிலை வகித்தார். அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு ஒன்றிய பொருளாளர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ஹரிபரத், ஒன்றிய இளைஞரணி செயலாளர் துரைசன், ஒன்றிய இளைஞரணி தலைவர் மதன் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் தச்சமொழி காந்திநகரில் அமைந்துள்ள உள்ள அம்பேத்கர் சிலைக்கு சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜ.க. செயலாளர் ஜெயராஜேஸ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட நெசவாளர் பிரிவு துணை தலைவர் சுடலைக்கண், மாவட்ட தரவு மேம்பாட்டு பிரிவு துணைத்தலைவர் ஜெயசுந்தரராஜ், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு துணைத்தலைவர் ராம் மோகன், ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு தலைவர் முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் காங்கிரஸ் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட துணைத்தலைவர் சங்கர், நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி ஜோசப், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ விழா சாத்தான்குளம் புதிய பஸ்நிலையம் மற்றும் காந்திநகரில் கொண்டாடப்பட்டது. தொகுதி செயலாளர் திருவள்ளுவன், தொண்டரணி மாநில துணை தலைவர் சுதாகர் ஆகியோர் தலைமை தாங்கினர். வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

நகர செயலாளர் வழக்கறிஞர் ராமச்சந்திரன், கிறிஸ்தவ நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் செங்கோல் மணி, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சரவணன், இளஞ்சிறுத்தை ஒன்றிய அமைப்பாளர் அந்தோணிராஜ், நகர துணை செயலாளர்கள் சிலுவைராஜ், முத்துராஜ், நகர பொருளாளர் கண்ணன், ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் ஜெபராஜ், பாண்டி, வழக்கறிஞர் கவுதம் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் அருகே முதலூர் ஆத்திக்காட்டில் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துராஜ் தலைமையில், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவரும், சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு சங்க தலைவருமான லூர்துமணி, வட்டார காங்கிரஸ் செயலாளர் லாரன்ஸ் மகிலன் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு அம்பேத்கர் மக்கள் தேசிய இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில், மாவட்ட விவசாயிகள் அணி செயலாளர் மாயாண்டி முன்னிலையில், மாவட்ட செயலாளர் ரகுநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாவட்ட பொருளாளர் குணசேகர், இணை செயலாளர் ஜெயசூர்யா, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் இளங்கோ, இளைஞர் அணி செயலாளர் அசோக், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story