அம்பேத்கர் நினைவு தினம்
கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டியில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி அம்பேத்கர் காலனியில் தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் அலங்கரித்து வைத்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுரேஷ், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபீப் ரஹ்மான், யூனியன் துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன், முஹைதீன் கனி, ஒன்றிய கவுன்சிலர் அருணாசல பாண்டியன், கிளைக் கழக செயலாளர் சுப்பிரமணியன், கருப்பண்ணன், பஞ்சாயத்து துணைத் தலைவர் மீரான் மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story