அம்பேத்கர் சிலையிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
கோவில்பட்டியில் அம்பேத்கர் சிலையிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் அம்பேத்கர் சிலையிடம் பா.ஜ.க. மாவட்ட பட்டியல் அணி தலைவர் எஸ். அய்யாத்துரை பாண்டியன் தலைமையில், மனு கொடுக்கும் பேராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதியை தமிழகத்தில் ஆட்சி புரிந்துள்ள திராவிட கட்சிகள் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story