முக்கொம்பு மேலணை பாலத்தில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ்-கார்
முக்கொம்பு மேலணை பாலத்தில் ஆம்புலன்ஸ்-கார் சிக்கி கொண்டன.
ஜீயபுரம்,செப்.5-
திருச்சியில் பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமாக முக்பொம்பு உள்ளது. மேட்டூரிலிருந்து வரக்கூடிய அகண்ட காவிரி ஆறு இந்த பகுதியில் காவிரி மற்றும் கொள்ளிடம் என இரண்டாக பிரிந்து செல்கிறது. இதனை பார்ப்பதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்கா உள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பேர் வந்து இருந்தனர். இந்த நிலையில் மேலணை அப்பர் அணைக்கட்டு பகுதியிலிருந்து வந்த காரும், முக்கொம்பு நுழைவு வாயில். பகுதியிலிருந்து வாத்தலை நோக்கிசென்ற 108 ஆம்புலன்சும் உரசிகொண்டு இருவாகனங்களும் செல்ல முடியாமல் நின்றன. நீண்டநேர போராட்டத்துக்கு பின் காரும், ஆம்புலன்சும் நகர்ந்து சென்றன. இதன் காரணமாக பாலத்தில் நெரிசல் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வெயிலில் நீண்டநேரம் காத்திருந்தனர்.