விருத்தாசலம் அருகே ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு போலீசார் விசாரணை


விருத்தாசலம் அருகே        ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு         போலீசார் விசாரணை
x

விருத்தாசலம் அருகே ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தியாகராஜன் மகன் இளையராஜா (வயது 45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜசேகர் மனைவி மங்கயைர்கரசி என்பவருக்கும் தேர்தல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி இளையராஜா தனது வயலில் இருந்தபோது, அங்கு வந்த ராஜசேகர் மகன்கள்ஆடல் அரசு, புகழேந்திராஜா உள்ளிட்டோர் கொண்ட கும்பல் இளையராஜாவை துப்பாக்கியால் சுட்டனர். இதில், படுகாயமடைந்த இளையராஜா சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து ஆடல்அரசு, புகழேந்திராஜா உள்ளிட்ட 9 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகழேந்திராஜாவுக்கு சொந்தமான புதிய ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகளை மர்மநபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதப்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்வையிட்டதுடன், அதனை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story