ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி படுகாயம்


ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி படுகாயம்
x

முத்துப்பேட்டை அருகே ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டையை அடுத்த நாச்சிகுளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவா (வயது55). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடைத்தெருவிற்கு வந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனியார் ஆம்புலன்சை பின்பக்கமாக இயக்கிய போது எதிர்பாராத விதமாக ஜீவா மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில் அவரது இரு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அதே ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜீவா மகன் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பேட்ைட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story