மீரான் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ் சேவை


மீரான் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ் சேவை
x

தென்காசி மீரான் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

தென்காசி

தென்காசி மீரான் மருத்துவமனையில் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை சார்பில் மேலாண்மை இயக்குனர் டாக்டர் சஹதுல்லா உத்தரவின் பேரில் ஐ.சி.யு. ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்சில் அனைத்து நவீன வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மீரான் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். கிம்ஸ் மருத்துவமனை மனிதவள மேலாண்மை மேலாளர் கிர்பேஷ், துணை பொது மேலாளர் சரவணன், டாக்டர் சுர்ஜித், வர்த்தக பிரிவு நிர்வாகிகள் அய்யப்பன், முத்துக்குமார், ஷெரின், டாக்டர்கள் தங்கபாண்டியன், திருவன், விஜய கோபாலன், டாக்டர் அவினாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ரோட்டரி கவர்னர் ஷேக் சலீம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., டாக்டர்கள் உதுமான், முத்தையா, சோமசுந்தரம், மைதீன் அகமது, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, பாரத் மாண்டிசோரி பள்ளி தாளாளர் மோகன கிருஷ்ணன், முதன்மை முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன், பேராசிரியை விஜயலட்சுமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் அழகராஜா, சுரேந்திரன், கணேசமூர்த்தி, காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மீரான் மருத்துவமனை முதன்மை டாக்டர் முகமது மீரான் நன்றி கூறினார்.

இந்த புதிய ஆம்புலன்ஸ் குறித்து அவர் கூறுகையில், இந்த ஆம்புலன்சில் ஐ.சி.யு. அறையில் என்னென்ன வசதிகள் உள்ளதோ அதுபோன்று அனைத்து வசதிகளும் உள்ளது. 24 மணி நேரமும் எங்களது மீரான் மருத்துவமனையில் இந்த ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கும். திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு சலுகை கட்டணத்தில் நோயாளிகளை கொண்டு செல்லலாம். இதில் வெண்டிலேட்டர், உயிர்காக்கும் கருவியான டி- பியூபிரிலேட்டர், ஆக்சிஜன், மானிட்டர் போன்ற அனைத்து கருவிகளும் உள்ளன. மேலும் இதில் 2 செவிலியர்கள், ஒரு டாக்டர், ஒரு உதவியாளர் ஆகியோர் பணியில் இருப்பார்கள் என்றார்.



Next Story