ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்


ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ராஜன், செல்வகுமார் தலைமை தாங்கினார்கள். கருப்பசாமி, தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுடலை குமார், ஜெயக்குமார், வனராஜ், கார்த்தி, ராமச்சந்திரன், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் 2022-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். சட்டவிரோத பணிநீக்கம், தண்டனைக்கான பணியிட மாறுதல், சீனியாரிட்டி பணியிட மாறுதல் போன்ற கோரிக்கைகளுக்கு மண்டல அளவிலான போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் வெள்ளதுரை செய்திருந்தார்.


Next Story