விஷம்குடித்து ஆம்புலன்ஸ் ஊழியர் தற்கொலை
விஷம்குடித்து ஆம்புலன்ஸ் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் அருகே உள்ள தியாகராஜபுரத்தை சேர்ந்தவர் சமுத்திரக்கனி (வயது64). இவரது மகன் சண்முகக்கனி (29). 108 ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறும் கூறியுள்ளார்.
பெற்றோர் சற்று பொறுக்கும்படி சண்முகக்கனியிடம் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து அவரது பெற்றோர் வெளியே சென்று விட்ட நிலையில் சண்முக கனி விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரது பெற்றோர் சண்முகக்கனியை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு சண்முகக்கனியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமுத்திரக்கனி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.