ஆம்பூர் நகரமன்ற கூட்டம்
ஆம்பூர் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் பி.ஏஜாஸ ்அகமது தலைமையில் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர பொதுநிதி செலவினம், நிர்வாக மேம்பாடு குறித்த தீர்மானம் மற்றும் மற்ற செலவினங்கள் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டது.
மேலும் நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள். இதற்கு நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமது அனைத்து கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதில் ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story