ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர் பணியிடை நீக்கம்


ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர் பணியிடை நீக்கம்
x

லஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர், சக ஊழியருக்கு பணி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக செல்போனில் பேசினார். அப்போது பணி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுதொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பணி ஒதுக்கீட்டுக்கு லஞ்சம் கேட்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட ஊழியர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக வேலூர் போக்குவரத்து மண்டல பொது மேலாளருக்கு புகார்கள் சென்றது. ஆடியோவில் பேசும் ஊழியர் தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து, அதிகாரிகள் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story