"கூட்டணி குறித்து அமித்ஷா உறுதி செய்துவிட்டார்; அண்ணாமலை ராஜினாமா செய்வாரா?" - முத்தரசன் கேள்வி
அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை அண்ணாமலை தான் சொல்ல வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான கூட்டணி தொடரும் என்று அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை, அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என ஏற்கனவே அறிவித்துள்ளார்.
எனவே அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். இதற்கெல்லாம் பிரதமர் மோடி நல்ல முறையில் தீர்வு காண்பார்."
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story