நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் -திருமாவளவன் வலியுறுத்தல்


நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் -திருமாவளவன் வலியுறுத்தல்
x

நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்துள்ள அறிக்கையின் விவரங்கள் வெளியே தெரியவந்து, இந்தி பேசாத மாநில மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே அறிக்கையின் விவரம் வெளியானது நாடாளுமன்ற விதிகளுக்கு புறம்பானதாகும். எனவே அந்த அறிக்கையை திரும்பப்பெற வேண்டும். அத்துடன், அக்குழுவின் தலைவர் பொறுப்பு வகிக்கும் அமித்ஷா, தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்.

அலுவல்மொழி குழு பரிந்துரைகளை அளிப்பது வழக்கம்தான் என்றாலும் இந்த பரிந்துரைகள் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களை திருப்திப்படுத்தி அவர்களுடைய வாக்குகளை வாங்குவதற்கான பா.ஜ.க.வின் தந்திரம் என்பதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் சூழலில் அதைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் பட்டினியால் வாடுவோர் அதிகம் உள்ள நாடு என்னும் அவப்பெயரை இந்தியாவுக்கு உருவாக்கி இருக்கும் பா.ஜ.க. அரசு, மொழி அடிப்படையிலான இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story