அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விருதுநகர்
ஆலங்குளம்,
வெம்பக்கோட்டை ஒன்றியம் காக்கிவாடன்பட்டி எஸ்.ஆர்.காலனியில் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிேஷம் நடந்தது. இதில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எதிர்கோட்டை ஜெயபாண்டியன், உதவியாளர் முத்துராஜ், மாவட்ட பிரதிநிதி பொன்னழகு, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பொருளாளர் விவேகானந்தன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கணேசன், கட்சி நிர்வாகிகள் கருப்பசாமி, பாண்டிஸ்வரன், பேச்சியப்பன், சவுந்தரபாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story