நந்தி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நந்தி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார்.
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் 17-வது நாளான நேற்று காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட நந்தி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வானவேடிக்கையுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story