புலி வாகனத்தில் அம்மன் வீதி உலா


புலி வாகனத்தில் அம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புலி வாகனத்தில் அம்மன் வீதி உலா

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூக்குண்டம் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூ குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதியும், திருத்தேர் வடம் பிடித்தல் 5-ந் தேதியும் நடைபெற்றது. 6-ந் தேதி அம்மன் குதிரை வாகனத்திலும், 7-ந் தேதி சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் புலி வாகனத்தில் வீற்றிருந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் சப்பரம் காம்பாய் கடை, பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நேற்று அம்மனை ஆற்றங்கங்கரையில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) மஞ்சள் நீராடல் மற்றும் மறு பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.


Next Story