அம்மாப்பேட்டை வீரமகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு
அம்மாப்பேட்டை வீரமகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு
தஞ்சாவூர்
அம்மாப்பேட்டை மாறாவடித்தெருவில் வீரமகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 4-ந்தேதி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடங்கள் புறப்பாடு நடைபெற்று, வீரமகாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அசோக்குமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story