மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் விரைவில் போராட்டம் டி.டி.வி. தினகரன் பேட்டி


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் விரைவில் போராட்டம் டி.டி.வி. தினகரன் பேட்டி
x

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும் என அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும் என அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

பாடுபட்டு வருகிேறாம்

திருப்பத்தூரில் மாவட்ட அ.ம.மு.க.செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது;-தமிழ்நாட்டில் ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஆட்சி அமைத்தவர்கள் இன்று கோர்ட்டுக்கு சென்று சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள். ஆகையால் தான் துரோகிகளை நம்பி இருக்காமல் நாங்கள் அவரது பெயரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என் பெயரில் கட்சியை ஆரம்பித்து அவர் வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.

கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிளைகளை ஏற்படுத்தி ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் அமைக்க பாடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் 25 ஆண்டுகள் முதல் 75 ஆண்டுகள் வரை உள்ள கட்சிகளுடன் போட்டியிட்டு தமிழகத்தில் வளர்ந்து வருகிறோம்.

கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் இன்று பதவியில் உள்ளார்கள் ெஜயலலிதாவின் கொள்கைகளை கூறி வரும் நாங்கள்தான் உண்மையான விசுவாசிகள்.

இந்த மாவட்டத்தில் புதிய கட்சி உறுப்பினர்களாக 1 லட்சம் பேர் சேர்ந்து உள்ளார்கள். வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், டி.டி.வி.தினகரன் கூட்டத்திற்கு வரவேண்டும் என கூறியிருப்பது பொய்யான தகவல். வேண்டும் என்றே ஆளுங்கட்சிக்கு ஆதரவான பத்திரிகை, மற்றும் டி.வி. இதனை பரப்புகிறது, ஓ.பி.எஸ். அணியும் நாங்களும் ஒன்றாக இணைந்து விடுவோம் என்று கூறி பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள். எங்கள் இயக்கம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து மக்களுக்காக போராடிக் கொண்டு வருகிறோம். நாடாளுமன்ற தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவெடுப்போம். மத்திய அரசு பால், அரிசி, பருப்பு, நெய் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பதை கண்டித்தும், தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் விரைவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றிபெற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்துள்ளார். ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தியவர் அவர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு தைரியம் கிடையாது.இவ்வாறு அவர் பேசினார்.


Next Story