மாடி தோட்டம் அமைக்க 50 சதவீதம் மானியம்-தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி வட்டார தோட்டக்கலை சார்பில், 600 மாடி தோட்டங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 450 ரூபாயில், 50 சதவீத மானியத்தில் இடுபொருட்கள், செடி வளர்க்கும் 6 பைகள், 2 கிலோ தென்னை நார் கழிவு கட்டிகள், 6 வகையான காய்கறி விதைகள், தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, 200 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி, 100 மில்லி வேப்ப எண்ணெய் மற்றும் ஒரு கையேடு வழங்கப்படுகிறது.
மாடி தோட்டம் அமைத்து நஞ்சு இல்லாத காய்கறிகளை சாகுபடி செய்ய விரும்பும் மக்கள் ஆதார் அட்டை ஜெராக்ஸ், இரு பாஸ்போர்ட் புகைப்படம், ஆகிவற்றுடன் கிருஷ்ணகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். அல்லது http://tnhorticulture.tn.gov.in/kitnew/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஒரு ஆதாருக்கு 2 தொகுப்புகள் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.