அமிர்தி உயிரின பூங்கா வழக்கம் போல் செயல்படும்


அமிர்தி உயிரின பூங்கா வழக்கம் போல் செயல்படும்
x

காணும் பொங்கலையொட்டி அமிர்தி உயிரின பூங்கா வழக்கம் போல் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர்

வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமிர்தி வன உயிரியல் பூங்கா உள்ளது. ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத்தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளன. மேலும் பூங்காவில் அடர்ந்து வளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இதில் ஞாயிறு உள்பட மற்ற அனைத்து நாட்களும் பூங்கா திறந்திருக்கும். இந்த நிலையில் காணும் பொங்கல் தினத்தையொட்டி விடுமுறை நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பூங்கா வழக்கம் போல செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story