கடலாடியில் அ.ம.மு.க. பொதுக்கூட்டம்
கடலாடியில் அ.ம.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சாயல்குடி,
கடலாடியில் முதுகுளத்தூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார்.கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை வரவேற்றார்.
மாவட்ட ெஜயலலிதா பேரவை செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் சாயல்குடி பச்சை கண்ணு, கடலாடி தெற்கு பாண்டியன், கிழக்கு ஜோதி முருகன், கடலாடி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மகாதேவன், அவைத்தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில செய்தி தொடர்பாளர் டேவிட் அண்ணாதுரை சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெசிமா பானு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பாப்பாக்குளம் பூமிநாதன், ஊராட்சி செயலாளர் நல்ல மருது, ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் மலைக்கண்ணன், முன்னாள் கூட்டுறவு தலைவர் உத்தமச்சந்திரன், ஒன்றிய ெஜயலலிதா பேரவை துணைச்செயலாளர் சண்முகநாதன் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் நகர் செயலாளர் பாலச்சந்தர் நன்றி கூறினார்,