அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு 18 அடி நீள அரிவாள் காணிக்கை
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தானியங்கள், காசு, பண முடிச்சு மற்றும் கன்றுகுட்டிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர் .அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு 18 அடி நீள அரிவாள் காணிக்கையாக செலுத்தப்பட்டது
மதுரை
அழகர்கோவில்
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தானியங்கள், காசு, பண முடிச்சு மற்றும் கன்றுகுட்டிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படிகருப்பணசுவாமிக்கு பக்தர்கள் சந்தனம், எலுமிச்சம்பழ மாலைகள், பூவண்ண மாலைகள் மற்றும் அரிவாள்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர், இதில் நேற்று ஒரு பக்தர் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள அரிவாளை காணிக்கையாக செலுத்தி, சாமி தரிசனம் செய்தார். மேலும் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட அரிவாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story