சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுமி சாவு


சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுமி சாவு
x

சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுமி சாவு

தஞ்சாவூர்

ஒரத்தநாட்டை அடுத்துள்ள பொய்யுண்டார்கோட்டை பல்லாகுளம் தெருவை சேர்ந்த நாராயணசாமி மகள் காவியா (வயது8). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். தற்போது பள்ளியில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருந்த காவியா நேற்று மாலை அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து காவியாவின் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் காவியாவின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story