மற்றொரு பட்டாசு ஆலையிலும் விபத்து; ஒருவர் சாவு


மற்றொரு பட்டாசு ஆலையிலும் விபத்து; ஒருவர் சாவு
x

சிவகாசி அருகே மற்றொரு பட்டாசு ஆலையிலும் வெடிவிபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர்


சிவகாசி,

சிவகாசி அருகே மற்றொரு பட்டாசு ஆலையிலும் வெடிவிபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

வெடி விபத்து

சிவகாசி வேலாயுதம் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டியில் உள்ளது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி நடைபெற்றது. 80 பெண்கள் உள்பட 140 பேர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலை 11.30 மணி அளவில் திடீரென பட்டாசு ஆலையில் ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது.

அந்த அறையில் பேன்சிரக பட்டாசுகளை திருத்தங்கல் மேலரதவீதியை சேர்ந்த ரவி(58), எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ்(48) தயாரித்துள்ளனர். அப்போது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக அது வெடித்து சிதறியது. வெடி விபத்தில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து கட்டிட இடுபாடுகளில் சிக்கி கொண்டனர்.

ஒருவர் சாவு

இடிபாடுகளுக்குள் சிக்கிய ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சாமுவேல்ஜெயராஜை சக தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Related Tags :
Next Story