பழமையான புளியமரம் தீப்பிடித்தது


பழமையான புளியமரம் தீப்பிடித்தது
x

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி பிணவறை அருகில் பழமையான புளியமரம் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி பிணவறை அருகில் சுமார் 50 ஆண்டு பழமையான புளியமரம் ஒன்று உள்ளது. இந்த புளியமரத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். யாராவது மர்மநபர்கள் புளியமரத்துக்கு தீ வைத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்ற புளியமரம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story