ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல் 2 பேர் கைது


ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல்    2 பேர் கைது
x

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்


ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்துள்ள தொழுதூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் பெரியசாமி (வயது 42). முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த காந்தி மகன் ராகுல், காந்தி மகன் சத்தியராஜ், ராஜீவ் காந்தி மகன் பாண்டியன், செல்வமணி மகன் பிரபாகரன், ராஜீ மகன் ரமேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பெரியசாமி குடும்பத்தினரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பெரியசாமி, அவரது மனைவி, மகன் மணிபாலன் ஆகியோர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரன், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story