கடனை திருப்பி கேட்டவர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி


கடனை திருப்பி கேட்டவர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி
x

கந்தர்வகோட்டை அருகே கடனை திருப்பி கேட்டவர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை:

ரூ.7 லட்சம் கடன்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 52). சோலகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசப்பன் மகன் சின்னையன் (28). இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7 லட்சத்தை கடனாக பாஸ்கர் கொடுத்துள்ளார். பின்னர் கொடுத்த பணத்தை பலமுறை கேட்டும் சின்னையன் அதனை திருப்பி தரவில்லை.

இதையடுத்து சின்னையன் வங்கி காசோலை ஒன்றை பாஸ்கரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த வங்கி காசோலையை வங்கியில் செலுத்திய போது சின்னையன் வங்கி கணக்கில் பணம் இல்லை என்பதால் காசோலை திருப்பி வந்தது. மேலும், வங்கியில் பணம் இல்லாத விவரத்தை பாஸ்கர், சின்னையனிடம் கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி

இந்நிலையில், பாஸ்கர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சோலகம்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த சின்னையன், பாஸ்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது ேமாதினார். இதில் பாஸ்கர் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னையனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடனை திருப்பி கேட்டவர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story