வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ெவள்ளியணை அருகே உள்ள சுப்பாரெட்டியூரில் வளர ்இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மைய ஆலோசகர் ராஜேஸ்வரி கலந்து கொண்டு, வளர் இளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதை தீர்க்கும் வழிமுறைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பள்ளியில் அளிக்கும் சத்து மாத்திரைகளை முறையாக உட்கொள்ளுதல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுகளை உட்கொண்டு, தன்சுத்தம் பேணி, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டியதின் அவசியம், நாப்கின் பயன்பாடு, கெட்ட நோக்கத்துடன் தொடுதல் மேற்கொள்வோரிடமிருந்து விலகி இருத்தல், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் தைரியமாக தெரிவித்தல் உட்பட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.