அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர்
கருங்கல் அருகே நடுவழியில் இறக்கி விட்டதால் அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கருங்கல்:
கருங்கல் அருகே நடுவழியில் இறக்கி விட்டதால் அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
அரசு பஸ்
கருங்கல் அருகே உள்ள மிடாலத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தேவிகோடு நிறுத்தத்தில் வந்த போது தேவிகோடு தோரணவிளையை சேர்ந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் ஏறினார். அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
பஸ்சில் ஏறிய வாலிபரிடம் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கூறினார். ஆனால், அந்த வாலிபர் டிக்கெட் எடுக்காமல் கண்டக்டரிடம் தகராறு செய்தார். அவரை பயணிகள் சிலர் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அந்த வாலிபர் டிக்கெட் எடுக்க மறுத்து தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.
கல்வீச்சு
இதையடுத்து அந்த பஸ் பாலவிளை பகுதியில் வந்த போது கண்டக்டரும், சக பயணிகளும் சேர்ந்து அவரை பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் கீழே இறங்கியதும் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி லேசாக உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து பஸ் டிரைவரும், கண்டக்டரும் கருங்கல் போலீசுக்கு தகவல் ெகாடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.