கற்குவியலாக காட்சி அளிக்கும் சாலை


கற்குவியலாக காட்சி அளிக்கும் சாலை
x

கூத்தாநல்லூர் அருகே கற்குவியலாக காட்சி அளிக்கும் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டு்ம் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே கற்குவியலாக காட்சி அளிக்கும் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டு்ம் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழல்கோட்டகம் - தேவங்குடி சாலை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, விழல்கோட்டகம் கிராமத்தில் இருந்து தேவங்குடிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை வெள்ளக்குடி, விழல்கோட்டகம், தேவங்குடி, அரிச்சபுரம், மேலாலவந்தசேரி, கீழாலவந்தசேரி, கற்கோவில், வாழச்சேரி, கிளியனூர், சித்தாம்பூர், பொதக்குடி, கூத்தாநல்லூர், அதங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கற்குவியல்

மேலும், இந்த சாலை மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருவாரூர், கொரடாச்சேரி போன்ற முக்கிய ஊர்களை இணைக்கும் வழித்தடமாக உள்ளது. இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இந்த சாலை வாகனங்கள் சென்று வரும் சாலை போல தற்போது இல்லை. இந்த சாைல சேதமடைந்து பல இடங்களில் குண்டும்- குழியுமாக கற்குவியலாக காட்சி அளிக்கிறது.

சீரமைக்க கோரிக்கை

மேலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சாலையில் கற்கள் சிதறிக் கிடக்கிறது. இருப்பினும் கடந்த 3ஆண்டுகளாக சாலை முழுவதும் பள்ளம் ஏற்பட்ட கற்கள் சிதறிக் கிடக்கிறது. இந்த சாலையிலேயே பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். சாலையில் கற்கள் சிதறிய நிலையில் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், சாலையின் இரண்டு பக்கமும் கருவேல மரங்கள் அடர்ந்த காடு போல வளா்ந்து உள்ளது.

கரடுமுரடான இந்த சாலையில் வாகனங்களில் சென்று வரும் போது சறுக்கி விழுந்து வாகன ஓட்டிகள் காயமடைகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சாலையை முழுமையான தார்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story