அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை


அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

அண்ணாமலை நகர்:

விருத்தாசலம் தாலுகா பெருந்துறை மேட்டு தெருவை சேர்ந்தவர் தவிட்டு மணி (வயது 70). இவர் உடல் நிலை பாதிப்பால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த தவிட்டுமணி கடந்த 10-ம் தேதி விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரியின் 5-வது வார்டின் அருகே மாடிக்கு செல்லும் படிக்கட்டு கைப்பிடியில் தவிட்டு மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைபார்த்து டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தவிட்டுமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து டாக்டர் கிஷோர்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story