மோட்டார் சைக்கிள் மீது லாரி ேமாதி முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது லாரி ேமாதி முதியவர் சாவு
x

மோட்டார் சைக்கிள் மீது லாரி ேமாதி முதியவர் சாவு

தஞ்சாவூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் திருவெங்கனூர் நடுத்தெருவை சேர்ந்த தர்மராஜ் (வயது60), திருவெங்கனூர் காலனி தெருவை சேர்ந்த முத்துசாமி (63). இவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் சென்று திருவையாறில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் திருவெங்கனூருக்கு சென்றுகொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தர்மராஜ் ஓட்டினார். பின்னால் முத்துசாமி அமர்ந்திருந்தார். திருவையாறு தேரடி அருகே வந்த போது, செங்கிப்பட்டியில் இருந்து பண்ருட்டிக்கு கியாஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி எதிர்பாராவிதமாக மோட்டார்சைக்்கிள் மீது மோதியது. இதில் தர்மராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த முத்துசாமி திருவையாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த திருவையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்மராஜ் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story