லோடு ஆட்டோ மோதியதால் சாலையில் சாய்ந்த மின்கம்பம்


லோடு ஆட்டோ மோதியதால் சாலையில் சாய்ந்த மின்கம்பம்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் லோடு ஆட்டோ மோதியதால் சாலையில் சாய்ந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத், திருச்செந்தூர் செல்லும் சாலையில் உயர் மட்ட பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலம் அருகில் உள்ள வளைவு பகுதியில் நேற்று காலை லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ, மின்கம்பம் மீது மோதி வி்ட்டு சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் உடைந்து, சாலையில் சரிந்து விழுந்தது. அப்போது மின்கம்பத்தில் மின்வினியோகம் இருந்தது. இதையடுத்து விபத்தை தடுக்கும் வகையில் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் இருபுறமும் செல்ல முடியாமல் காத்திருந்தன.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் சாலையில் சரிந்து கிடந்த மின்கம்பத்தை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த சம்பவத்தில் லோடு ஆட்டோ டிரைவர் சாத்தான்குளத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.


Next Story