முண்டந்துறை ஆற்றில் தண்ணீர் அருந்தி தாகம் தீர்த்த யானை
முண்டந்துறை ஆற்றில் காட்டு யானை ஒன்று தண்ணீர் அருந்தி தாகம் தீர்த்தது.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும், மூலிகை செடிகளும் உள்ளன. தற்போது நிலவும் கடும் கோடை வெயிலால் வனவிலங்குகள் நீர்நிலைகளை தேடி அடிக்கடி செல்கின்றன.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் முண்டந்துறை வனச்சரக அலுவலகம் அருகில் உள்ள ஆற்றில் இரும்பு பாலம் அருகே நேற்று முன்தினம் மாலையில் ஒற்றை யானை தண்ணீர் அருந்தி தாகத்தை தீர்த்து சென்றது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் புகைப்படம் எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
Related Tags :
Next Story