தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்டு வந்த யானை சிக்கியது..!


தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்டு வந்த யானை சிக்கியது..!
x

கொடுங்கையாற்றின் நடுவே 8 வயது மதிக்கத்தக்க யாணை வாயில் காயத்துடன் சுற்றி திரிந்து வந்தது.

கோவை,

கோவை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் 50-க்கும் அதிகமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையில் உள்ள கொடுங்கையாற்றின் நடுவே 8 வயது மதிக்கத்தக்க ஆண்டு காட்டு யானை நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இந்த யானை மிகவும் சோர்வான நிலையில் காணப்பட்டது. இதனை பார்த்த பட்டிசாலை பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வாயில் காயம் தகவல் அறிந்த தமிழக மற்றும் கேரள வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, காட்டு யானையை கண்காணிக்க தொடங்கினர்.

அப்போது யாணை வாயில் காயத்துடன் எதுவும் சாப்பிட முடியாமலும், தண்ணீர் குடிக்க முடியாமலும் சுற்றி திரிவது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக, கேரள வனத்துறையினர் இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்டு வந்த யானையை கோவை, தோலம்பாளையம் அடுத்த செங்குட்டை வனப்பகுதியில் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக, கேரள வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.


Next Story