நிதி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் கையாடல் செய்த ஊழியர் கைது


நிதி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் கையாடல் செய்த ஊழியர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் உள்ள நிதி நிறுநுவனத்தில் பொதுமக்களிடம் ரூ.3 லட்சம் வரை வசூலித்து கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடியில் உள்ள நிதி நிறுநுவனத்தில் பொதுமக்களிடம் ரூ.3 லட்சம் வரை வசூலித்து கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

நிதி நிறுவனம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 30). இவர் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிதி நிறுவனத்தில் கடன் பெறும் வாடிக்கையாளர்களிடம் தவணை முறையில் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

வாணியம்பாடி, ஆலங்காயம், காவலூர் மற்றும் வேப்பங்குப்பம், ஒடுகத்தூர், ஆசனாம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்று வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த கடன் தொகையை நிறுவனத்திற்கு செலுத்தாமல் இவர் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சில வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் வசூலாகமால் இருந்து வந்ததால் சம்பந்தப்பட்டவர்களிடம் அது குறித்து நிதி நிறுவனம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது,

ஆனால் பணத்தை செலுத்தியதாக வாடிக்கையாளர்களில் பலர் ஊரியர் நித்தியானந்தத்திடம் செலுத்தியதாக தெரிவித்தனர்.

போலீசில் புகார்

இதனால் சந்தேகம் அடைந்த மேலாளர் மணிமாறன் தலைமையில் மற்ற ஊழியர்கள் மேற்படி பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரித்த போது நித்தியானந்தம் பல வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்து அதனை நிறுவனத்தில் செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை நிறுவனத்தில் செலுத்துமாறு கூறி வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு நித்தியானந்தம் தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து நிதி நிறுவனத்தின் மேலாளர் மணிமாறன் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் தலைமறைவான நித்தியானந்தத்தை தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் அவர் ஒசூர் பகுதியில் இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று பதுங்கியிருந்த நித்தியானந்தத்தை கைது செய்து மேலும் விசாரித்தனர்.

அப்போது வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் வேப்பங்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 80-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் தொகை வசூல் செய்து, அதனை சொந்த செலவிற்காக பயன்படுத்தியதாக நித்தியானந்தம் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story