விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி


விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 28 March 2023 1:15 AM IST (Updated: 28 March 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

தாரமங்கலம்:-

தாரமங்கலம் அருகே தெசவிளக்கு கிராமம் செங்கோடனூர் பகுதியை சேர்ந்த பழனி மகன் கணபதி (வயது 20). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் வழக்கம்போல் தனது பணியை முடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கே.ஆர்.தோப்பூர் பவர் ஹவுஸ் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த கணபதி மீது எதிரில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கிய கணபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கணபதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கணபதியின் தந்தை பழனி கொடுத்த புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story