பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம்

பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம்
x

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் ெசய்யப்பட்டார்.

விருதுநகர்

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் ெசய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியோ கிராபராக பணியாற்றி வந்தவர், சுனில் (வயது 40).

இவர் மீது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், மருத்துவக்கல்லூரி டீனிடம் புகார் அளித்தார். தனக்கு பாலியல் ரீதியாக சுனில் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் பேரில், இதுகுறித்து விசாரிக்க 5 பெண் மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

பணியிடை நீக்கம்

இக்குழுவின் பரிந்துரையின் பேரில் ரேடியோ கிராபர் சுனிைல பணியிடை நீக்கம் செய்து, டீன் சங்குமணி நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் கூறுகையில், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தினால் பணி நியமனம் செய்யப்பட்டவர் சுனில். எனவே மருத்துவ சேவை கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது, எனவும் தெரிவித்தார்.

Next Story