மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் பங்கேற்று திரும்பிய அரியலூர் வீரருக்கு உற்சாக வரவேற்பு


மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் பங்கேற்று திரும்பிய அரியலூர் வீரருக்கு உற்சாக வரவேற்பு
x

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் பங்கேற்று திரும்பிய அரியலூர் வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் நகரில் உள்ள சிங்காரத்தெருவை சேர்ந்தவர் சிவஜோதி. தச்சுத்தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ்குமார்(வயது 27). மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரான இவர் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார். இதைத்தொடர்ந்து இவர் நேபாள நாட்டில் நடைபெற்ற இந்தியா- நேபாள அணிகளுக்கு இடையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடினார். இதில் நடைபெற்ற 3 போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. மேலும் சந்தோஷ்குமார் ஒரு போட்டியில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் அவர் 3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதை அடுத்து வளர்ந்து வரும் வீரருக்கான விருதையும் பெற்றார்.இதைத்தொடர்ந்து சொந்த ஊரான அரியலூருக்கு திரும்பிய சந்தோஷ்குமாருக்கு நேற்று முன்தினம் அரியலூர்-செந்துறை புறவழிச்சாலைகளில் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்து, தாரை தப்பட்டை முழங்க காரில் அவரை ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் சந்தோஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டை வளர்க்க தமிழக அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தால், மேலும் அதிகப்படியான இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட முன்வருவார்கள், என்றார். அவருக்கு புறவழிச்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்(சட்டம்-ஒழுங்கு) கோபிநாத், (போக்குவரத்து) கார்த்திகேயன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story