கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஒத்திகை
கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஒத்திகை நடைபெற்றது.
திருச்சி
கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 200 ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் போலீசார் கலந்து கொண்டனர். இதில் போலீசாரின் ஒரு பகுதியினரை கலவரக்காரர்களாக சித்தரித்து, செயற்கையாக கலவரத்தை உண்டாக்கி காவல்துறையில் பயன்படுத்தப்படும் வருண் வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து, வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசியும், கலவரக்காரர்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படாமல் கலவரக்கூட்டத்தை கலைத்து கட்டுப்படுத்தும் ஒத்திகை தத்துரூபமாக போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலையில் நடத்தி காட்டப்பட்டது.
Related Tags :
Next Story