பட்டாசு தயாரிக்க முயன்றபோது வெடி விபத்து


பட்டாசு தயாரிக்க முயன்றபோது வெடி விபத்து
x

சாத்தூர் அருகே பட்டாசு தயாரிக்க முயன்ற போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூர் அருகே பட்டாசு தயாரிக்க முயன்ற போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சந்தையூர் கிராமத்தில் காட்டு பகுதியில் பட்டாசு தயாரிப்பதற்காக ரகு (வயது 45), அவரது உறவினர் முகேஷ் (22) ஆகியோர் சென்றனர். அப்போது 2 பேரும் பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் முகேஷ், ரகு ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அப்பையநாயக்கன்பட்டி போலீசார் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் படுகாயம்

அங்கு படுகாயம் அடைந்த 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரவு நேரத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்க முயன்றது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story