சாலை பள்ளத்தில் பஸ் சக்கரம் சிக்கியதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


சாலை பள்ளத்தில் பஸ் சக்கரம் சிக்கியதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x

அரக்கோணம் அருகே சாலை பள்ளத்தில் பஸ் சக்கரம் சிக்கியதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் நெமிலி செல்லும் சாலையில் ஒத்தவாடை தெரு அருகே குறுகலாக உள்ள பகுதியின் வழியே பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் குறுக்கே மழை நீர் செல்வதற்காக சரிவாக சாலை அமைத்து இருப்பதாக கூறப்படும் இடத்தில் அவ்வப்போது வாகனங்கள் சிக்கி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சாலையில் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்னல் நோக்கி வந்த தனியார் பஸ் சக்கரம் அந்த பள்ளத்தில் சிக்கியது. சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் ஒன்றிய கவுன்சிலர் கோமதி பிரசாத், மின்னல் ஊராட்சி மன்ற தலைவர் கோபி மற்றும் பொது மக்களும் சரி செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story