மதுபோதையில் ஓட்டல் உரிமையாளர் நடுரோட்டில் ரகளை

மதுபோதையில் ஓட்டல் உரிமையாளர் நடுரோட்டில் ரகளை
x

வந்தவாசியில் மதுபோதையில் ஓட்டல் உரிமையாளர் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் மதுபோதையில் ஓட்டல் உரிமையாளர் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசி புதிய பஸ் நிலைய சாலையில் ஓட்டல் நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர் நேற்று காலையிலேயே மது குடித்து விட்டு போதையில் அந்த பகுதியில் பஸ் ஏறுவதற்கு நின்று இருந்த பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டார். அவதூறான வார்த்தைகளை பேசியதால் பெண்கள் மிகவும் அச்சத்திற்கு ஆளாயினர்.

தகவலறிந்த போலீசார் அங்கு சென்று அவரை தடுக்க முயன்றனர். ஆனால் போலீசாரிடமும் அவர் அவதூறாக பேசினார்.அந்த வழியாக வந்த நபர்களின் வாகனங்களை எட்டி உதைத்து அவர்களிடம் வீண் சண்டையில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் பெரும் சிரமப்பட்டு அவரை விசாரணைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story