யானை தந்தத்தால் செய்த பொருள் கண்டெடுப்பு


யானை தந்தத்தால் செய்த பொருள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

யானை தந்தத்தால் செய்த பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் இதுவரை 10 குழிகள் தோண்டப்பட்டதில் பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு யானை தந்தத்தால் ஆன பாசிமணி கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சுமார் 8 அடி ஆழத்தில் மேலும் சில பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றில் யானை தந்தத்தால் ஆன ஆட்டக்காய், உலோகத்தால் செய்த ஒப்பனை கருவி, இரும்பு கத்தி, செம்பு டாலர் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் கூடுதலாக பொருட்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story