வளர்த்த மாடு நெஞ்சில் முட்டியதில் முதியவர் சாவு


வளர்த்த மாடு நெஞ்சில் முட்டியதில் முதியவர் சாவு
x

வளர்த்த மாடு நெஞ்சில் முட்டியதில் முதியவர் உயிரிழந்தார்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள்ள புதுப்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கலியராஜ் (வயது 67). விவசாயி. இவர் காளை மாடுகள் வளர்த்து வந்தார். அதில் ஒரு காளை மாட்டை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டபோது திடீரென கலியராஜ் நெஞ்சில் அந்த மாடு கொம்பால் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த கலியராஜை உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கலியராஜின் மகன் கருப்புசாமி பூதலூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Next Story