குப்பைகளை எரித்தபோது தீயில் கருகி முதியவர் சாவு
திருவட்டார் அருகே குப்பைளை எரித்தபோது தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே குப்பைளை எரித்தபோது தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
முதியவர்
திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் பிலாங்காலவிளையை சேர்ந்தவர் ரதிகுமாரி. இவருடைய தந்தை ரவீந்திரன் நாயர் (வயது74). இவர் மகளின் வீட்டின் பின் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டின் பின்பக்கம் கிடந்த குப்பைகளுக்கு தீவைத்து எரித்துக் கொண்டு இருந்தார்.
தவறி விழுந்தார்
அப்போது திடீரென நிலைதடுமாறி தீயில் தவறி விழுந்தார். இதில் தீ உடல் முழுவதும் பரவியதால் ரவீந்திரன் நாயர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது சத்தம் கேட்டு மகள் ரதிகுமாரி மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர், அவர்கள் ரவீந்திரன் நாயரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவீந்திரன் நாயர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரதிகுமாரி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.