கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்து முதியவர் சாவு


கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்து முதியவர் சாவு
x

கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்து முதியவர் சாவு

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள இரவிபுதூர்கடை பள்ளித்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 64), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று செல்வராஜ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரவிபுதூர்கடை அரசு பள்ளி அருகில் சென்றபோது, திடீரென நிலைதடுமாறி அங்கிருந்த கழிவுநீர் ஓடைக்குள் விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைகண்டு அதிர்ச்சி அடைந்து, உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவட்டார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story