விபத்தில் முதியவர் பலி


விபத்தில் முதியவர் பலி
x

விபத்தில் முதியவர் பலி

ஈரோடு

டி.என்.பாளையம்

கோபி அருகே உள்ள அளுக்குளி கோபிபாளையம் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70). இவர் நேற்று இரவு கள்ளிப்பட்டி கொண்டையம்பாளையம் பஞ்சகருப்பராயன் கோவில் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரும், பொன்னுசாமியின் மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பொன்னுசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு பொன்னுசாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story