விபத்தில் முதியவர் பலி


விபத்தில் முதியவர் பலி
x

காரியாபட்டி அருேக விபத்தில் முதியவர் பலியானார்.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (வயது 69) என்பவர் நரிக்குடி-திருப்புவனம் சாலையில் சமத்துவபுரத்தில் உள்ள தனதுவீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடந்தார். அப்போது உழக்குடி கிராமத்தை சேர்ந்த கதிர் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கருப்பையா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கருப்பையாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கருப்பையா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story