புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த முதியவர் கைது


புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த முதியவர் கைது
x

திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த முதியவர் கைது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த மர்ம நபரை சோதனை செய்தபோது அவரிடம் இருந்த பையில் ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காமராஜ்(வயது 60) என்பது தெரியவந்தது. இதையடு்த்து அவரை கைது செய்த போலீசார் ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story